Advertisement

NZ vs BAN: டி20 தொடரிலிருந்து விலகிய கேன் வில்லியம்சன், கைல் ஜேமிசன்!

வங்கதேச அணிக்கெதிரான டி20 தொடரிலிருந்து மருத்துவ காரணங்களுக்காக நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் கைல் ஜேமிசன் ஆகியோர் விலகியுள்ளனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan December 22, 2023 • 13:25 PM
NZ vs BAN: டி20 தொடரிலிருந்து விலகிய கேன் வில்லியம்சன், கைல் ஜேமிசன்!
NZ vs BAN: டி20 தொடரிலிருந்து விலகிய கேன் வில்லியம்சன், கைல் ஜேமிசன்! (Image Source: Google)
Advertisement

வங்கதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி நியூசிலாந்து அணி 44 ரன் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி வரும் நாளை நடைபெற உள்ளது. 

Trending


இந்த ஒருநாள் தொடர் நிறைவடைந்ததும் இவ்விரு அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் கடந்த ஓராண்டாக டி20 அணியில் இடம்பிடிக்காம இருந்த கேன் வில்லியம்சன் மீண்டும் அணிக்கு திரும்பியதுடன், அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் மருத்துவ காரணங்களுக்காக கேன் வில்லியம்சன் மற்றும் கைல் ஜேமிசன் ஆகியோர் இத்தொடரிலிருந்து விலகுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் அவர்களுக்கு மாற்றாக ரச்சின் ரவீந்திரா மற்றும் ஜேக்கப் டஃபி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த அணியின் கேப்டனாக மிட்செல் சாண்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார். 

நியூசிலாந்து டி20 அணி: மிட்செல் சாண்ட்னெர் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, ஃபின் ஆலென், மார்க் சாம்ப்மென், ஆடம் மில்னே, டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னெர், பென் சீயர்ஸ், டிம் செய்ஃபர்ட், இஷ் சோதி, டிம் சௌதீ, ஜேக்கப் டஃபி.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement