இந்த வெற்றி எங்களுக்கு மிக்வும் முக்கியம் - பென் ஸ்டோக்ஸ்
நியூசிலாந்துக்கு எதிரான இந்த வெற்றி மிகவும் முக்கியமானது என இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்ட பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஜூன் 2ஆம் தேதி லண்டனிலுள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் 132/10 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை முடித்துக்கொண்டது. அடுத்துக் களமிறங்கிய இங்கிலாந்து அணியும் 141/10 ரன்களை மட்டும் சேர்த்து, முதல் இன்னிங்ஸை முடித்துக்கொண்டது.
Trending
இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணி டேரில் மிட்செல் 108 (203), டாம் பிளெண்டில் 96 (198) இருவரும் மெகா பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இதனால், நியூசிலாந்து அணி 285/10 ரன்களை குவித்தது.
அதன்பின் 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஜோ ரூட்டின் சதம் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸின் அரைசத்ததினால், 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றிபெற்றது. ரூட் 115 (170), பென் போக்ஸ் 32 (92) ஆகியோர் களத்தில் இருந்தார்கள்.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது ஆனால் அது ஒரு நீண்ட பயணமாக இருக்கும். இது ஒரே இரவில் நடக்கப்போவதில்லை, நமக்கு கடினமான நேரங்கள் இருக்கும், அதில் சந்தேகமில்லை. ஆனால் நாம் எப்படி பதிலளிக்கிறோம் என்பது தான் அதற்கான மரியாதை” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now