உலகக்கோப்பையை விட ஐபிஎல் கோப்பையை வெல்வது கடினம் - சவுரவ் கங்குலி!
உலகக்கோப்பைத் தொடரில் கோப்பையை வெல்வதை விடவும் ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்வதே கடினமானது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் இந்திய அணியின் மூத்த வீரர்கள் மீதும், கேப்டனான ரோகித் சர்மா ஆகியோரை நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். ஏனென்றால் கடந்த 10 ஆண்டுகளில் 9 முறை ஐசிசி தொடர்களில் மட்டும் இந்திய அணி மோசமான தோல்விகளை அடைந்து வருகிறது.
இந்த நிலையில் பிசிசிஐ முன்னாள் தலைவரும், முன்னாள் இந்திய கேப்டனுமான சவுரவ் கங்குலி பேசுகையில், “தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு பின் விராட் கோலி இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து திடீரென விலகிய போது, பிசிசிஐ நிர்வாகத்திற்கு வேறு கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால் அப்போது ரோஹித் சர்மா தான் சிறந்த வீரராக இருந்தார்.
Trending
அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்றிருந்தார். அதுமட்டுமல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும், டி20 உலகக்கோப்பை அரையிறுதியிலும் தோல்வியை சந்தித்திருந்தோம். அதனால் கோப்பைகளை வென்றிருந்த ரோஹித் சர்மா சிறந்த வாய்ப்பாக எங்களுக்கு தெரிந்தார். ரோகித் சர்மா மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. ஏனென்றால் 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றவர்கள் எம்எஸ் தோனியும், ரோஹித் சர்மாவும் மட்டும் தான்.
உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வெல்வதை காட்டிலும், ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்வது சவாலானது. ஏனென்றால் உலகக்கோப்பைத் தொடரில் 4 முதல் 5 போட்டிகளில் வென்றாலே அரையிறுதி அல்லது இறுதிப்போட்டியில் விளையாடலாம். ஆனால் ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும். கிட்டத்தட்ட 17 போட்டிகளில் விளையாடினால் மட்டுமே கோப்பையை வெல்ல முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now