
Wisden's World Test Championship XI (Image Source: Google)
சர்வதேச டெஸ்ட் அணிகளுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2019ஆம் ஆண்டு தொடங்கியது. இத்தொடரின் இறுதி போட்டிக்கு விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இறுதி போட்டி இங்கிலாந்திலுள்ள ஜூன் 18ஆம் தேதி ஆஜெஸ் பௌல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதனிடையே சர்வதேச விளையாட்டு நாளிதழான விஸ்டன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷ் தொடருக்கான லெவன் அணியை இன்று அறிவித்துள்ளது.