
பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் அணிக்கு எதிராக நான்கு நாள் பயிற்சி போட்டியில் டிசம்பர் 6ஆம் தேதி கான்பெரா மைதானத்தில் பாகிஸ்தான் அணி விளையாடுகிறது.
இந்த சுற்றுப்பயணத்தில் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 14 பெர்த் மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 மெல்போன் மைதானத்திலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 3 2024 சிட்னி மைதானத்திலும் நடைபெற இருக்கிறது. மேலும் இந்த டெஸ்ட் தொடருடன் ஒட்டுமொத்தமாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் ஓய்வு பெற இருக்கிறார்.
டேவிட் வார்னரை வழி அனுப்பி வைப்பதற்காக ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு மிகச் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருக்கிறது. மேலும் யாருக்கும் இல்லாத வகையில் டேவிட் வார்னர் விரும்பிய வரையில் விளையாட விட்டு, சொந்த நாட்டில் அவர் ஓய்வு பெறும் வகையில் அனுமதித்து ஆஸ்திரேலியா ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.