ஐபிஎல் 2025: ஜானி பேர்ஸ்டோவை ஒப்பந்தம் செய்யும் மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து வில் ஜேக்ஸ் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக ஜானி பேர்ஸ்டோவை மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளன.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான போர் பதற்றம் காரணமாக இத்தொடரில் எஞ்சியிருந்த போட்டிகளை ஒருவாரம் ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்திருந்தது.
இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்ததை தொடர்ந்து ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் எதிவரும் மே 17ஆம் தேதி முதல் தொடங்கும் என்று பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. அதன்படி மே 17ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் லீக் சுற்று போட்டிகள் மே 27ஆம் தேதி வரையில், மே 29ஆம் தேதி முதல் பிளே ஆஃப் போட்டிகளும், ஜூன் 03அம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும் இத்தொடரின் எஞ்சிய லீக் போட்டிகள் அனைத்தும் பெங்களூரு, டெல்லி, லக்னோ, அஹ்மதாபாத், மும்பை மற்றும் ஜெய்ப்பூரில் மட்டுமே நடைபெறும் என்றும், பிளே ஆஃப் சுற்றுக்கான மைதானங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து அனைத்து ஐபிஎல் அணிகளும் எஞ்சிய போட்டிகளுக்கான தங்களுடைய தயாரிப்புகளில் இறங்கிவுள்ளன.
அதேசமயம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் தொடர்கள் காரணமாக ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்தைச் சேர்ந்த வீரர்கள் எஞ்சிய போட்டிகளில் விளையாடுவார்களா என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. இதனால் தொடரில் இருந்து விலகும் வீரர்களுக்கான மாற்று வீரர்களைத் தேர்வு செய்யும் முயற்சிகளில் ஐபிஎல் அணிகள் இறங்கிவுள்ளன. அதன் ஒரு பகுதியாக மும்பை இந்தியன்ஸ் அணியும் சில மாற்றங்களைச் செய்துள்ளது.
அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த இங்கிலாந்து வீரர் வில் ஜேக்ஸ் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ளதன் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவருக்கு பதிலாக இங்கிலாந்தின் அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர் பேட்டர் ஜானி பேர்ஸ்டோவை மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது 35 வயதான ஜானி பேர்ஸ்டோவ் இதுவரை ஐபிஎல் தொடரில் 50 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் அவர் இரண்டு சதங்கள் மற்றும் 9 அரைசதங்கள் என 1589 ரன்களை எடுத்துள்ளார். மேலும் டாப் ஆர்டர் வீரரான இவர் இங்கிலாந்து அணிக்காகவும் 100 டெஸ்ட், 107 ஒருநாள் மற்றும் 80 டி20 போட்டிகளில் விளையாடி 10ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களைச் சேர்த்துள்ள அனுபவத்தையும் கொண்டுள்ளார்.
Also Read: LIVE Cricket Score
மேற்கொண்டு மும்பை இந்தியன்ஸின் தொடக்க வீரர் ரியான் ரிக்கெல்டனும் பிளே ஆஃப் போட்டிகளை தவறவிடுவார் என்பாதால், ஜானி பேர்ஸ்டோவின் வருகை அணிக்கு பெரும் சாதகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் ரிக்கெல்டன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பிடித்திருப்பதான் காரணமாக அவரும் தொடரில் இருந்து வெளியேறுவார் என்பதால் ஜானி பேர்ஸ்டோவின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now