
WIW vs PAKW: All-round Sana helps Pakistan end tour on high (Image Source: Google)
பாகிஸ்தான் மகளிர் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ஒருநாள் தொடரையும் 3-1 என கைப்பற்றியிருந்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டி தொடங்குவதற்கு முன்னரே மழை பெய்த காரணத்தால் ஆட்டம் சிறிதுநேரம் ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பின் டக்வெர்த் லூயிஸ் முறைப்படி 34 ஓவர்கள் கொண்ட போட்டியாக தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.