
WI-W vs SA-W, 3rd T20I: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸில் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியதுடன், 2011ஆம் ஆண்டிற்கு பிறகு அந்த அணிக்கு எதிராக டி20 தொடரை வென்று சாதித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரில் சமநிலையில் இருந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நேற்று பார்படாஸில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீராங்கனைகள் சுனே லூஸ் 13 ரன்னிலும், தஸ்மின் பிரிட்ஸ் 20 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த லாரா வோல்வார்ட் மற்றும் மியான் ஸ்மிட் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் லாரா வோல்வர்ட் 28 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் களமிறங்கிய மரிஸான் கேப், கரபோ மெசோ, சோலே ட்ரையான் உள்ளிட்ட வீராங்கனைகள் சோபிக்க தவறினர். இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த மியான் ஸ்மித் 59 ரன்களைச் சேர்த்தார்.