
WIW vs SAW: Lizelle Lee 91* headlines dominant win for South Africa (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் அப்பிரிக்க மகளிர் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, நைட் - நேஷன் இணை மட்டும் சற்று நிலைத்து ஆடி ஸ்கோரை உயர்த்தியது. இருப்பினும் 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்களை மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியால் எடுக்க முடிந்தது.