
ஆஸ்திரேலிய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஆஷஸ் டெஸ்ட் போட்டி நேற்று நாட்டிங்ஹாமில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு பெத் மூனி - லிட்ச்ஃபீல்ட் இணை நிதானமான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் லிட்ச்ஃபீல்ட் 23 ரன்களில் ஆட்டமிழக்க, பெத் மூனியும் 33 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த எல்லீஸ் பெர்ரி - தஹிலா மெக்ராத் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்துடன் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். பின் 61 ரன்களை எடுத்திருந்த மெக்ரத் விகெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஜெஸ் ஜொனசென், கேப்டன் அலீசா ஹீலி ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.