Advertisement
Advertisement
Advertisement

மகளிர் ஆஷஸ் 2022: ஹீதர் நைட் அதிரடியால் தப்பிய இங்கிலாந்து; ஆஸி தடுமாற்றாம்!

மகளிர் ஆஷஸ் 2022: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் மழை காரணமாக முன்கூட்டிய முடிவடைந்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan January 29, 2022 • 14:31 PM
Women's Ashes Test: Knight & Brunt Produce An England Fightback Before Rain Forces Stumps On Day 3
Women's Ashes Test: Knight & Brunt Produce An England Fightback Before Rain Forces Stumps On Day 3 (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மகளிர் ஆஷஸ் டெஸ்ட் போட்டி கான்பெர்ராவில் நடைபெற்று வருகிறது. 

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 337 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸைத் டிக்ளர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி  இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து மகளிர் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்களைச் சேர்த்தது. 

Trending


இதையடுத்து மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணியில் கேப்டன் ஹீதர் நைட் 127 ரன்களுடன் இன்னிங்ஸைத் தொடர்ந்தார். 

தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹீதர் நைட் 168 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அவருடன் இணைந்து விளையாடிய சோஃபி எக்லஸ்டோன் 34 ரன்களைச் சேர்த்து உதவினார். 

இதனால் இங்கிலாந்து அணி 297 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் எல்லிஸ் பெர்ரி 3 விக்கெட்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதன்பின் 40 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் ரேச்சல் ஹெய்னஸ், அலிசா ஹீலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

இதனால் 12 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. பின்னர் மழை குறுக்கிட்டதன் விளையாவாக மூன்றாம் நாள் ஆட்டம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 

இதனால் 52 ரன்களுடன் ஆஸ்திரேலிய அணி நாளை இறுதிநாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. அந்த அணியில் பெத் மூனி 7 ரன்களுடனும், எல்லிஸ் பெர்ரி ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement