
Women's CWC 2022: India defeat Bangladesh by 110 runs (Image Source: Google)
நியூசிலாந்தில் 12ஆவது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் ஆஸ்திரேலிய மகளிர் அணி அடுத்தடுத்து 6 போட்டிகளிலும் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்நிலையில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற மீதமுள்ள அணிகளும் தீவிரமாக போராடி வருகின்றன. அந்த வரிசையில் வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் இன்று ஹேமில்டனில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.