
Women's CWC 2022: India defeat Pakistan by 107 runs (Image Source: Google)
நியூசிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி பூஜா வஸ்த்ரேகர், ஸ்நே ராணா ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக பூஜா வஸ்த்ரேகர் 67 ரன்களையும், ஸ்நே ராணா 53 ரன்களையும் சேர்த்தனர்.