Advertisement

மகளிர் உலகக்கோப்பை 2022: தொடரிலிருந்து வெளியேறியது நியூசிலாந்து!

மகளிர் உலகக் கோப்பை 2022: பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது நியூசிலாந்து அணி. எனினும் அரையிறுதிக்குத் தகுதி பெறாததால் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.

Advertisement
Women's CWC 2022: New Zealand beat Pakistan by 71 runs
Women's CWC 2022: New Zealand beat Pakistan by 71 runs (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 26, 2022 • 11:32 AM

நியூசிலாந்தில் நடைபெற்றுவரும் மகளிர் உலகக்கோப்பை தொடரானது சுவாரஷ்யமான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

Bharathi Kannan
By Bharathi Kannan
March 26, 2022 • 11:32 AM

இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை சூசி பேட்ஸ் 126 ரன்கள் எடுத்து அசத்தினார். 

Trending

இதையடுத்து இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியில் நிதா தார் அரைசதம் கடந்தார். ஆனால் மற்ற வீராங்கனைகள் வந்த வேகத்திலேயே பெவிலியனுக்கு நடையைக் கட்டி ஏமாற்றமளித்தனர். 

இதனால் பாகிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் மட்டுமே எடுத்து 71 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. 

இத்துடன் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளின் 2022 உலகக் கோப்பைப் பயணம் முடிவடைந்தது. பாகிஸ்தான் அணி 7 ஆட்டங்களில் 1 வெற்றி மட்டுமே பெற்று 2 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 

நியூசிலாந்து அணி 7 ஆட்டங்களில் 3 வெற்றிகளை மட்டும் பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 6ஆம் இடத்தில் உள்ளது. சொந்த மண்ணில் போட்டி நடைபெற்றாலும் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியாத சோகத்துடன் பயணத்தை நிறைவு செய்துள்ளது நியூசிலாந்து அணி. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement