
Women's IPL likely to start in March 2023: Report (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் போது மகளிர் டி20 சேலஞ்ச் ஆட்டங்கள் நடைபெறுவது வழக்கம். எனினும் இதர நாடுகளைப் போலவே இந்தியாவிலும் மகளிர் டி20 லீக் போட்டியை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்தன.
மகளிர் ஐபிஎல் தொடரை அடுத்த வருடம் தொடங்குவது சரியாக இருக்கும். அது நிச்சயம் ஐபிஎல் போட்டியைப் போல பெரிய வெற்றியை அடையும் என்று கடந்த பிப்ரவரி மாதம் பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்தார். மகளிர் ஐபிஎல் தொடரை விரைவில் தொடங்கும், அதன் மதிப்பு அனைவரையும் திகைப்பூட்டும் விதத்தில் இருக்கும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சமீபத்தில் கூறினார்.
இந்நிலையில் 2023 மார்ச் மாதம் ஐபிஎல் போட்டியைத் தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிசிசிஐ வருடாந்திரப் பொதுக்கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.