
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று லாகூரில் நடைபெற்ற லீக் போட்டியில் தாய்லாந்து மற்றும் வங்கதேச மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற தாய்லாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச மகளிர் அணிக்கு இஷ்மா தஞ்ஜிம் - ஃபர்கானா ஹக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இஷ்மான் தஞ்ஜிம் 8 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஃபர்கானாவுடன் இணைந்த ஷர்மின் அக்தர் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபர்கான் ஹக் அரைசதம் கடந்து அசத்திய நிலையில் 53 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் ஷர்மின் அக்தருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் நிகர் சுல்தானாவும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இந்த ஆட்டத்தில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினார். அதன்பின் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த நிகர் சுல்தானா சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 15 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 101 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் சுல்தானா தனது விக்கெட்டை இழந்தார்.