
ஆடவருக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி 2008ஆம் ஆண்டு தொடங்கி வெற்றிகரமாக வீறுநடை போட்டு வருகிறது. இதே போல் மகளிருக்கான ஐபிஎல் போட்டி நடத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை ஏற்று இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் மகளிருக்கான முதலாவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் மும்பையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்கு 'மகளிர் பிரீமியர் லீக்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 5 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த 5 அணிகளின் ஏலம் மூலமாக பிசிசிஐ 4669.99 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
இந்நிலையில் இந்த மகளிர் பிரிமீயர் லீக் எப்போது தொடங்கும் என்ற விவரத்தை ஐபிஎல் சேர்மன் அருண் துமால் தெரிவித்துள்ளார். இது தொடரபாக அவர் கூறும்போது, ‘மகளிர் பிரிமீயர் லீக் மார்ச் மாதம் 4ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை மும்பையில் தொடங்குகிறது. வருகிற 13ஆம் தேதி வீராங்கனைகள் ஏலம் மும்பையில் நடைபெறுகிறது.