மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் தொடக்கம்!
மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் வங்கதேசத்தில் நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

ஆடவருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் தசுன் ஷனாகா தலைமையிலான இலங்கை அணி பாகிஸ்தானை வீழ்த்தி 6ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் வங்தேசத்தில் நடைபெற உள்ளது. அந்நாட்டில் உள்ள சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அனைத்துப் போட்டிகளும் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்தேசம், தாய்லாந்து, இலங்கை, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மோதுகின்றன.
இந்நிலையில், ஆசிய கோப்பைக்கான மகளிர் கிரிக்கெட் டி20 போட்டிக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி, ஆசிய மகளிர் டி20 போட்டி வரும் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்க உள்ளது.
இந்திய அணி விளையாடும் போட்டி அட்டவணை
- அக்டோபர் 1ஆம் தேதி - இந்தியா vs இலங்கை
- அக்டோபர் 3ஆம் தேதி - இந்தியா vs மலேசியா
- அக்டோபர் 4ஆம் தேதி - இந்தியா vs ஐக்கிய அரபு அமீரகம்
- அக்டோபர் 7ஆம் தேதி - இந்தியா vs பாகிஸ்தான் அ
- அக்டோபர் 8ஆம் தேதி - இந்தியா vs வங்காளதேசம்
- அக்டோபர் 10ஆம் தேதி - இந்தியா vs தாய்லாந்து
Win Big, Make Your Cricket Tales Now