
Women’s T20 Asia Cup: India will need 66 runs to win the Asia Cup final (Image Source: Google)
எட்டாவது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. மொத்தம் 7 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் நடப்பு சாம்பியன் வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் அரையிறுதியில் தோற்றன.
இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் 5 வெற்றி, ஒரு தோல்வியுடன் முதலிடம் பிடித்தது. தொடர்ந்து அரையிறுதியில் 74 ரன்கள் வித்தியாசத்தில் தாய்லாந்தை பந்தாடி 7ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது.