
கடந்த மார்ச் மாதம் புனே மைதானத்தில் இந்திய -இங்கிலாந்து அணிகள் விளையாடிய முதல் ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடது முழங்கையில் காயமடைந்தார். இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தாக வேண்டும் என்று மருத்துவ குழு அறிவுறுத்தியது.
இந்நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வெடுத்து வரும் ஐயர், தற்பொழுது இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட போவதில்லை என்று பிசிசிஐ அறிவித்துள்ளது
அறுவை சிகிச்சை முடிந்தவுடன் பொதுவாக 3 முதல் 5 மாதங்கள் ஒரு வீரருக்கு ஓய்வானது தேவைப்படும். அதன்படி பார்க்கையில் ஸ்ரேயாஸ் ஐயர் தற்பொழுது வீட்டில் ஓய்வு பெற்று வருகிறார். அவர் மறுபடியும் இயல்பு நிலைக்கு திரும்பி வலை பயிற்சியை மேற்கொண்டு, மீண்டும் விளையாடும் தகுதியுடன் திரும்ப வேண்டும். அதற்குப் பின்னர்தான் இந்திய அணியில் அவர் பழையபடி விளையாட முடியும் என்று பிசிசிஐ கூறியுள்ளது.