
நடப்பு உலகக்கோப்பை தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் இந்திய அணி மிக எளிமையாக பாகிஸ்தான் அணியை வென்றது. பாகிஸ்தான் அணியின் பேட்டிங் ஆர்டரில் மேல் வரிசையில் இரண்டு விக்கெட் மட்டும் இழந்து 155 ரன்கள் எடுத்த பாகிஸ்தான், அங்கிருந்து மொத்தமாக சரிந்து 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதற்கு அடுத்து பந்துவீச்சுக்கு வந்த பாகிஸ்தான அணியால் இந்தியாவை எதுவுமே செய்ய முடியவில்லை. ரோஹித் சர்மாவின் அதிரடிக்கு பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களிடம் எந்த பதிலும் இல்லை. இதன் காரணமாக இந்திய அணி மிக எளிமையாக வெற்றி பெற்றதோடு நல்ல ரன் ரேட்டை எடுத்துக் கொண்டு, பாகிஸ்தான் அணியின் ரன் ரேட்டுக்கு பிரச்சினையை உண்டாக்கியது.
அந்த குறிப்பிட்ட போட்டியை பாகிஸ்தான் அணியின் நம்பிக்கையை மீண்டும் உடைத்து இருக்கிறது. அவர்கள் முதலிலிருந்து நம்பிக்கை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இதன் காரணமாக பாகிஸ்தான் முன்னால் வீரர்கள் கேப்டன் பாபர் ஆசாம் மற்றும் பாகிஸ்தான் அணியின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இதில் வாசிம் அக்ரம் மற்றும் சோயப் மாலிக் இருவரும் மிகக் கடுமையான விமர்சனங்களை தொடுத்தார்கள்.