
World Cup-Winning English Women Cricketers Nat Sciver & Kat Brunt Tie The Knot (Image Source: Google)
கடந்த 2017 ஆம் ஆண்டு மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் வீராங்கனைகளான கேத்ரின் ப்ரண்ட் மற்றும் நடாலி ஸ்கைவர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கேப்டன் ஹீதர் நைட், டேனி வியாட், இசா குஹா, ஜென்னி கன் உள்ளிட்ட இங்கிலாந்து அணியின் தற்போதைய மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் இத்திருமண விழாவில் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “திருமணம் செய்து கொண்ட கேத்ரின் ப்ரண்ட் மற்றும் நாட் ஸ்கைவர் ஆகியோருக்கு எங்கள் அன்பான வாழ்த்துக்கள்” என்று வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.
கேத்ரின் ப்ரண்ட் மற்றும் நடாலி ஸ்கைவர் ஆகியோர் 2017 ஆம் ஆண்டு மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் உறுப்பினர்கள். இருவரும் 2022 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையிலும் இடம்பெற்றனர்.