ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்: வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ள இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி தோற்றால் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா 2ஆவது பிடிக்கும்.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இதில், இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 55.7% வெற்றிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது இந்திய அணி. ஆஸ்திரேலிய மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் தொடர்ந்து முதல் இரண்டு இடங்களில் நீடித்து வருகின்றன.
Trending
இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியை வங்கதேசம் அணியுடன் விளையாட உள்ளது. அதிலும் வெற்றி பெற்று, பின்னர் நடக்கவிருக்கும் ஆஸ்திரேலியா அணியுடனான டெஸ்ட் தொடரில் 3-0 அல்லது 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றால் மட்டுமே முதல் இரண்டு இடங்களுக்குள் முன்னேறி இந்திய அணியால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும்.
மேலும் தற்போது ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் ஏறத்தாழ தென் ஆப்பிரிக்க அணி தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், அதுவும் இந்திய அணிக்கு மிகப்பெரும் சாதகமாகப் பார்க்கப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now