
மகளிர் பிரீமியர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. புள்ளி பட்டியலில் டாப் 3 இடங்களில் உள்ள மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடள்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் ஆகிய 3 அணிகளும் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன. ஆர்சிபி மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் தொடரைவிட்டு வெளியேறிவிட்டன.
புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் 2ம் இடத்தில் இருந்த டெல்லி கேபிடள்ஸ் ஆகிய 2 அணிகளும் மோதிய போட்டி மும்பை டி.ஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணிகள் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் டாப் 3 வீராங்கனைகளான யஸ்திகா பாட்டியா(1), ஹெய்லி மேத்யூஸ்(5), நாட் ஸ்கிவர் பிரண்ட் (0) ஆகிய மூவரும் ஏமாற்றமளித்தனர். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 23 ரன்கள் அடித்தார். பின்வரிசையில் பூஜா வஸ்ட்ராகர் 26 ரன்களும், இசி வாங் 23 ரன்களும், அமன்ஜோத் கௌர் 19 ரன்களும் அடித்தனர்.