Advertisement
Advertisement
Advertisement

WPL 2023: பெர்ரி, ரிச்சா அதிரடி; டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு 151 டார்கெட்!

டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 151 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan March 13, 2023 • 20:57 PM
WPL 2023: Ellyse Perry remains unbeaten at 67 after her sublime knock against the Delhi Capitals!
WPL 2023: Ellyse Perry remains unbeaten at 67 after her sublime knock against the Delhi Capitals! (Image Source: Google)
Advertisement

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதலாவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா மீண்டும் 8 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பி ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த சோபி டிவைன் - எல்லிஸ் பெர்ரி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் சோபி டிவைன் 21 ரன்களிலும், அடுத்து வந்த ஹீதர் நைட் 11 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தனர். 

Trending


இதையடுத்து எல்லிஸ் பெர்ரியுடன் ஜோடி சேர்ந்த ரிச்சா கோஷ் தொடக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், பின்னர் அதிரடியாக விளையாடி சிக்சரும் பவுண்டரியுமாக விளாசித்தள்ளினார். அதேசமயம் மறுபக்கம் அதிரடி காட்டத்தொடங்கிய எல்லிஸ் பெர்ரி தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

பின்னர் 16 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்களை விளாசி 37 ரன்களைச் சேர்த்திர்ந்த ரிச்சா கோஷ் ஆட்டமிழந்தார். ஆனாலும் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய எல்லிஸ் பெர்ரி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 52 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 67 ரன்களைச் சேர்த்தார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களைச் சேர்த்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் ஷிகா பாண்டே 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement