
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதலாவது சீசன் ரசிகர்களில் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் ஹர்மன்பரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸும், மெக் லெனிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மும்பையிலுள்ள பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு ஷஃபாலி வர்மா அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனார்.
ஆனால் அவரது அதிரடி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இஸி வாங் விசிய முதல் ஓருவரில் அடுத்தடுத்து சிக்சரும் பவுண்டரியும் விளாசிய அவர், 3ஆவது பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த அலிஸ் கேப்ஸியும் அதே ஓவரில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமற்றமளித்தார்.