Advertisement

WPL 2023: ஹேமலதா, கார்ட்னர் அரைசதம்; வாரியர்ஸுகு 179 டார்கெட்!

யுபி வாரியர்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. 

Advertisement
WPL 2023: Hemalatha, Gardner's fireworks helps Gujarat Giants post a total of 178 runs!
WPL 2023: Hemalatha, Gardner's fireworks helps Gujarat Giants post a total of 178 runs! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 20, 2023 • 05:05 PM

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதலாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெய்னட்ஸ் -யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
March 20, 2023 • 05:05 PM

அதன்படி களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீராங்கனைகள் லாரா வோல்வார்ட் - சோபியா டங்க்லி இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய லாரா வோல்வார்ட் 17 ரன்களிலும், சோபிய டங்க்லி 23 ரன்களோடும் விக்கெட்டை இழந்தனர். 

Trending

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஹர்லீன் தியோலும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஹேமலதா - ஆஷ்லே கார்ட்னர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஹேமலதா அரைசதம் கடந்து அசத்தினார். 

அதன்பின் 33 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 57 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். ஆனால் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஆஷ்லே கார்ட்னர் 35 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பின்னர் அவரும் 6 பவுண்டரி, 3 சிகச்ர்கள் என 60 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிர்கு 178 ரன்களைச் சேர்த்துள்ளது. யுபி வாரியர்ஸ் அணி தரப்பில் ராஜேஸ்வரி கெய்க்வாட், பார்ஷவி சோப்ரா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement