
ஆர்சிபி அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி லாரா வோல்வார்ட் - பெத் மூனியின் அபார ஆட்டத்தின் மூலம் 200 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் மீதான ரசிகர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ச் பெங்களூரு அணியும், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
ஏற்கெனவே குஜராத் ஜெயண்ட்ஸ் அணி நடப்பு சீசனில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியதால், இப்போட்டியிலாவது முதல் வெற்றியைப் பெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் தொடக்க வீராங்கனைகள் லாரா வோல்வார்ட் - கேப்டன் பெத் மூனி இணை முதல் ஓவரில் இருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர்.