கிரிக்கெட்டில் என்ன நடக்கும் என்பதை கணிக்க இயலாது - ஸ்மிருதி மந்தனா!
கிரிக்கெட்டில் என்ன நடக்கும் என்பதை யாராலும் எளிதாக கணிக்க முடியது. அதனால் நாங்கள் இந்த தோல்வியை ஏற்றுக்கொண்டு வலுவாக மீண்டு வருவோம் என்று ஆர்சிபி அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற ஆர்சிபி - யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடந்து முடிந்துள்ளது. இதில் யுபி வாரியர்ஸ் அணி சூப்பர் ஓவர் முடிவில் ஆர்சிபி அணியை வீழ்த்தி தங்களுடைய இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
அதன்படி, இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியானது எல்லிஸ் பெர்ரி மற்றும் டேனியல் வையட் ஹாட்ஜ் ஆகியோரின் அரைசதத்தின் காரண்மாக 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி 90 ரன்களையும், டேனியல் வையட் ஹாட்ஜ் 57 ரன்களையும் சேர்த்தனர். வாரியர்ஸ் தரப்பில் சினெல்லே ஹென்றி, தீப்தி சர்மா, தஹ்லியா மெக்ராத் இணை தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
அதான்பின் இலக்கை நோக்கி விளையாடிய யுபி வாரியர்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சோஃபி எக்லெஸ்டோன் அதிரடியாக விளையாடி ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 33 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் யுபி வாரியர்ஸ் அணியும் 20 ஓவர்கள் முடிவில் 180 ரன்களைக் குவித்து போட்டியை டிரா செய்தது. இதன்மூலம் இந்த ஆட்டம் சூப்ப்ர் ஓவருக்கு சென்றது.
பின்னர் சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த யுபி வாரியர்ஸ் அணி 9 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில், அதனைத் துரத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சூப்பர் ஓவரில் 3 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் யுபி வாரியர்ஸ் அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்ட சோஃபி எக்லெஸ்டோன் ஆட்டநாயகி விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து பேசிய ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனா, “இந்த தோல்வி மிகவும் ஏமாற்றமளித்தது. இப்போட்டியில் நாங்கள் பேட்டிங் மற்ரும் பந்துவீச்சில் நிறைய விஷயங்களைச் சரியாகச் செய்தோம். ஆனால் கிரிக்கெட்டில் என்ன நடக்கும் என்பதை யாராலும் எளிதாக கணிக்க முடியது. அதனால் நாங்கள் இந்த தோல்வியை ஏற்றுக்கொண்டு வலுவாக மீண்டு வருவோம்.
Also Read: Funding To Save Test Cricket
இந்தப் போட்டியில் நான் சோபிக்க தவறினேன். அதனால் சில விஷயங்களில் உழைத்து வலுவாக மீண்டு வருவேன். எல்லிஸ் பெர்ரி போன்ற ஒரு ஆல் ரவுண்டர் எங்கள் அணியில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் அவரின் பந்துவீச்சு எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அனைத்து பந்து வீச்சாளர்களும் மிகச் சிறப்பாக பந்து வீசினர், கிரிக்கெட்டில் இதுபோன்ற விஷயங்கள் நடக்கும். அதனால் இதிலிருந்து நாங்கள் முன்னேறுவோம் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now