
மூன்றாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தில். வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியின் முடிவில் ஆர்சிபி அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், தொடரையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து பேசிய குஜராத் அணி கேப்டன் ஆஷ்லே கார்ட்னர், “இந்த மைதானம் பேட்டர்களுக்கு சாதமாக இருப்பதை நாங்கள் உணர்ந்தோம். இங்கு 200 ரன்கள் என்பது ஒரு சமமான வெற்றி வாய்ப்பை உருவாக்கும் ஸ்கோராக இருந்தது. அதன் காரணமாக நங்கள் நன்றாக பந்து வீச வேண்டியிருந்தது. துரதிர்ஷ்டவசமாக இப்போட்டியில் அது நடக்கவில்லை. நாங்கள் சில வாய்ப்புகளை தவறவிட்டோம்.
இறுதியில் அது எங்களின் தோல்விக்கு முக்கிய காரண்மாக அமைந்துவிட்டது. ஒவ்வொரு ஆட்டத்திலும் எப்போதும் நேர்மறையான விஷயங்கள் இருக்கும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக இப்போட்டியில் எங்களால் வெற்றிபெற முடியவில்லை. இப்போட்டியில் எங்கள் அணியின் பெத் மூனி மற்றும் டியாண்டிரா டோட்டின் ஆகியோர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். அதனால் நாங்கள் ஒரு நல்ல ஸ்கோரை எட்டமுடிந்தது.