கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாட முயற்சித்தேன்- ஹர்லீன் தியோல்!
நீங்கள் ரன்கள் எடுத்து அணி வெற்றி பெறும்போது, அதைவிட சிறந்ததை வேறு எதுவும் எதிர்பார்க்க முடியாது என குஜராத் ஜெயண்ட்ஸ் வீராங்கனை ஹர்லீன் தியோல் தெரிவித்துள்ளார்.

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 17ஆவது லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியின் முடிவில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி வெற்றிபற்றது.
அதன்படி, இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மெக் லனிங் அதிரடியாக விளையாடி 15 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 92 ரன்களையும், ஷஃபாலி வர்மா 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 40 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களைச் சேர்த்தது. குஜராத் ஜெயண்ட்ஸ் தர்பபில் மேக்னா சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Trending
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணியில் பெத் மூனி 44 ரன்களிலும், தயாளன் ஹேமலதா ஒரு ரன்னிலும், கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் 22 ரன்னிலும், டியான்டிரா டோட்டின் 24 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்லீன் தியோல் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 70 ரன்களையும், காஷ்வீ கௌதம் 9 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
இதன்மூலம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 8 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்லீன் தியோல் ஆட்டநாயகி விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டி குறித்து பேசிய ஹர்லீன் தியோல், “இப்போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாட முயற்சித்தேன். ஏனெனில் எனக்கு பிறகு நிறைய பெரிய ஹிட்டர்கள் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். பெத் மூனியுடன் பேட்டிங் செய்யும் போது எங்களால் ஸ்கோரை உயர்த்த முடிந்தது. ஏனெனில் அவர் தேவைப்படும் நேரங்களில் பவுண்டரி அடிப்பதுடன், சிங்கிள்கள் எடுத்து ஸ்டிரைக்கையும் ரொட்டேட் செய்கிறார்.
மேலும் அவர் ரன்னிற்கு ஓடும் சமயங்களில் ஜாக்கிரதையாக இருப்பதால் என்னிடமும் எச்சரிக்கையாக் இருக்க கேட்டுக்கொண்டு ரன்களைச் சேர்க்க கூறினார். மேலும் டியான்டிரா டோட்டின் போல் மற்ற பவர் ஹிட்டர்கள் பேட்டிங் செய்யும் போது நான் அவர்களுக்கு ஸ்டிரைக்கை கொடுக்க விரும்பினேன். காஷ்வி கௌதம் சிக்ஸர்களை அடிப்பதில் சிறந்தவர் என்பது எனக்கு தெரியும்.
Also Read: Funding To Save Test Cricket
ஆதனால் ஷிகா பாண்டே ஓவரை வீசும் தருணத்தில் நான் அவரிடம் ஷிகா நேராக பந்தை வீசுவதால் அது தாழ்வாக இருக்கும், அதனால் கண்ணை மூடிக்கோண்டு பேட்டை சுழற்று என்று கூறினேன். அவரும் அதனை சரியாக செய்ததுடன் சிக்ஸரையும் விலாசினார். நீங்கள் ரன்கள் எடுத்து அணி வெற்றி பெறும்போது, அதைவிட சிறந்ததை வேறு எதுவும் எதிர்பார்க்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now