Advertisement

மகளிர் பிரீமியர் லீக் 2024: அணிகள் வாங்கிய வீராங்கனைகள் விவரம்!

மகளீர் பிரீமியர் லீக் தொடரின் மினி ஏலத்தில் அணிகள் எந்தெந்த வீராங்கனைகளை வாங்கியது என்பது குறித்த முழு விவரத்தை இப்பதிவில் காண்போம்.

Bharathi Kannan
By Bharathi Kannan December 09, 2023 • 22:57 PM
மகளிர் பிரீமியர் லீக் 2024: அணிகள் வாங்கிய வீராங்கனைகள் விவரம்!
மகளிர் பிரீமியர் லீக் 2024: அணிகள் வாங்கிய வீராங்கனைகள் விவரம்! (Image Source: Google)
Advertisement

2024 மகளிர் பிரிமியர் லீக் தொடருக்கான மினி ஏலம் இன்று நடைபெற்றது. மொத்தம் 160 பேர் பங்கேற்ற இந்த ஏலத்தில் 30 வீராங்கனைகளை அணிகள் தேர்வு செய்தது. இந்த ஏலத்தில் சர்வதேச போட்டிகளில் இன்னும் அறிமுகம் கூட ஆகாத இந்திய வீராங்கனை காஷ்வி கவுதம் 2 கோடிக்கு வாங்கப்பட்டு வரலாறு படைத்தார். குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 2 கோடி ரூபாய் கொடுத்து காஷ்வி கவுதமை அணியில் சேர்த்தது. 

மகளிர் பிரீமியர் லீக் வரலாற்றில் சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீராங்கனை ஒருவருக்கு கொடுக்கப்பட்ட அதிகபட்ச விலை இதுதான். ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் அன்னாபெல் சதர்லேண்ட்-ஐ டெல்லி கேப்பிடல்ஸ் 2 கோடி கொடுத்து வாங்கியது. மும்பை இந்தியன்ஸ் அணியுடன் போட்டி போட்டு டெல்லி அணி சார்பில் ஏலத்தில் பங்கேற்ற சவுரவ் கங்குலி அவரை ஏலத்தில் வென்றார்.

Trending


ஆஸ்திரேலிய வீராங்கனை ஃபோப் லிட்ச்ஃபீல்ட்-ஐயும் 1 கோடிக்கு குஜராத் ஜெயண்ட்ஸ் அணி வாங்கியது. இலங்கை அணித்தலைவர் சாமரி அத்தபட்டு மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் டெண்ட்ரா டோட்டின் ஆகியோரை ஏலத்தில் யாரும் வாங்காதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

அணிகள் ஏலத்தில்வாங்கிய வீராங்கனைகள் பட்டியல்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: ஜார்ஜியா வேர்ஹாம் (ரூ 40 லட்சம்), கேட் கிராஸ் (ரூ.30 லட்சம்), ஏக்தா பிஷ்ட் (ரூ.60 லட்சம்), சுபா சதீஷ் (ரூ.10 லட்சம்), எஸ். மேகனா (ரூ.30 லட்சம்), சிம்ரன் பகதூர் (ரூ.30 லட்சம்), சோஃபி மோலினக்ஸ் (ரூ.30 லட்சம்)

குஜராத் ஜெயண்ட்ஸ்: ஃபோப் லிட்ச்ஃபீல்ட் (ரூ.1 கோடி), மேக்னா சிங்  (ரூ.30 லட்சம்), த்ரிஷா பூஜிதா (ரூ.10 லட்சம்), காஷ்வி கவுதம் (ரூ.2 கோடி), பிரியா மிஸ்ரா (ரூ.20 லட்சம்), லாரன் சிட்டில் (ரூ.30 லட்சம்), கேத்தரின் பிரைஸ் (ரூ.10 லட்சம்), மன்னாத் காஷ்யாப் (ரூ.10 லட்சம்), வேதா கிருஷ்ணமூர்த்தி (ரூ.30 லட்சம்), தர்னம் பதான் (ரூ.10 லட்சம்)

யுபி வாரியர்ஸ்: விரிந்தா தினேஷ் (ரூ.1.3 கோடி), டேனியல் வையாட் (ரூ.30 லட்சம்), கவுஹர் சுல்தானா (ரூ.30 லட்சம்), பூனம் கெம்னார் (ரூ.10 லட்சம்), சைமா தாக்கூர் (ரூ.10 லட்சம்)

மும்பை இந்தியன்ஸ்: ஷபனீம் இஸ்மாயில் (ரூ.1.20 கோடி), அமன்தீப் கவுர்  (ரூ.10 லட்சம்), எஸ். சஞ்சனா (ரூ.15 லட்சம்), பாத்திமா ஜாபர் (ரூ.10 லட்சம்), கீர்த்தனா பாலகிருஷ்ணன் (ரூ.10 லட்சம்)

டெல்லி கேபிடல்ஸ் : அன்னபெல் சதர்லேண்ட் (ரூ.2 கோடி), அபர்ணா மண்டல் (ரூ.10 லட்சம்), அஸ்வனி குமாரி (ரூ.10 லட்சம்)


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement