சஹாலை தோளில் தூக்கி சுழற்றிய மல்யுத்த வீராங்கனை; வைரலாகும் காணொளி!
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலை தோளில் தூக்கி சுழற்றிய மல்யுத்த வீராங்கனை சங்கீதா போகத்தின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர் யுஸ்வேந்திர சஹால். இவர் இந்திய அணிக்காக 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 121 விக்கெட்டுகளையும், 80 டி20 போட்டிகளில் விளையாடி 96 விக்கெட்டுகளையும் என கைப்பற்றியுள்ளார். இதுதவிர்த்து ஐபிஎல் தொடரில் 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சஹால் 187 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் கடந்தாண்டு நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட சஹால், மேற்கொண்டு இந்திய அணி விளையாடிய போட்டிகளிலும் சரிவர வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்தார். மேலும் சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்ட ஒப்பந்த பட்டியலில் இருந்த யுஸ்வேந்திர சஹால் நீக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை ஏறத்தாழ முடிவுக்கு வந்ததாகவே சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Trending
இந்நிலையில் சஹாலின் மனைவி தனஸ்ரீ வர்மா தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். அதற்கான படப்பிடிப்பு தளத்தில் சஹாலும் இருந்துள்ளார். அப்போது அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியாவின் மல்யுத்த வீராங்கனை சங்கீதா போகத், யுஸ்வேந்திர சஹாலை தனது தோளில் தூக்கியதுடன் அவரை சுழற்றினார். இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Good grip. Good flight. Lots of revolutions.
— Ramesh Srivats (@rameshsrivats) March 3, 2024
Sangeeta Phogat uses Yuzvendra Chahal to demonstrate leg-spin.
pic.twitter.com/9MdPbWs6vx
அந்த காணொளியில் சங்கீதா போகத், யுஸ்வேந்திர சஹாலை தோளில் தூக்கி சுழற்றிய போது சஹால் போதும் என்னை விட்டுவிடுங்கள் என்று கூறினார். இதையடுத்து சங்கீதா போகத் அவரை கிழே இறக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடப்பாண்டு ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், யுஸ்வேந்திர சஹால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now