
Wriddhiman Saha tests negative for Covid-19, to join India squad for England tour (Image Source: Google)
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் விருத்திமான் சஹா. சமீபத்தில் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் போது சஹாவிற்கு கரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து அவர் மருத்துவ கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டார். இதற்கிடையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இவரது பெயர் இடம்பெற்றது.
அதன்பின் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் மீண்டு தொற்று உறுதி செய்யப்பட்டதால், இங்கிலாந்து தொடரில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் அனைவரது மத்தியிலும் எழுந்தது.