
நியூசிலாந்து அணியானது இலங்கையுல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணியானது அபாரமான வெற்றியைப் பெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
அதன்படி இன்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 156 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றுள்ளது. இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புதுப்பிக்கப்பட்ட புள்ளிப்பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய அணி 71.67 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 62.50 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் நீடிக்கின்றனர். இந்நிலையில் நியூசிலாந்துக்கு டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ள இலங்கை அணியானது 55.56 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடதை தக்கவைத்துள்ளது. அதேசமயம் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்துள்ள நியூசிலாந்து அணியானது 37. 50 புள்ளிகளுடன் 7ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.