Advertisement

WTC 2023: காயத்திலிருந்து மீண்டார் ஹசில்வுட்!

காயத்திலிருந்து மீண்ட ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
WTC Final 2023: Australia Confident Of Josh Hazlewood's Availability For WTC Final After Scans Show
WTC Final 2023: Australia Confident Of Josh Hazlewood's Availability For WTC Final After Scans Show (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 22, 2023 • 10:57 PM

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இரண்டாவது சீசனுக்கான இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் முன்னேறியுள்ளன. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டி வரும் ஜூன் மாதம் 7ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 22, 2023 • 10:57 PM

இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளராக ஜோஷ் ஹசில்வுட் கருதப்படுகிறார். ஆனால் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் இடம்பிடித்திருந்த அவர், காயம் காரணமாக ஐபிஎல்லில் இருந்து விலகி இம்மாத தொடக்கத்தில் நாடு திரும்பினார். காயத்திலிருந்து மீண்ட  ஜோஷ் ஹசில்வுட், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

Trending

இந்நிலையில், அவரது காயம் குறித்து தனியார் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் செய்தித் தொடர்பாளர், “ஹசில்வுட்டுக்கு எடுக்கப்பட்ட ஸ்கேனில் எந்தவித பாதிப்பும் இல்லை எனத் தெரிய வந்துள்ளது. சிறு காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் ஆஷில் போட்டிகளில் விளையாட முழு வீச்சில் தயாராகி வருகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement