உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: அணி, இடம், நேரலை விவரங்கள்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இரு அணிகளின் விவரம், அணிகளின் நேருக்கு நேர் மோதல் குறித்த தரவுகள், இத்தொடரை இந்திய ரசிகர்கள் நேரலையில் காணும் வழி குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியான்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது ஜூன் 11ஆம் தேதி முதல் லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியானது பட்டத்தை தக்க வைக்கும் முயற்சியில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் இதுநாள் வரை ஐசிசி தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் தடுமாறி வரும் தென் ஆப்பிரிக்க அணியானது, இம்முறை இந்த போட்டியில் வெற்றிபெறுவதுடன் வரலாற்றை மாற்றி எழுதும் முனைப்பிலும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.
இதனையடுத்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியமும், டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் நேற்றைய தினம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்போட்டிக்கான இரு அணிகளின் விவரம், அணிகளின் நேருக்கு நேர் மோதல் குறித்த தரவுகள், இத்தொடரை ரசிகர்கள் காணும் வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான அணிகள்
தென் ஆப்பிரிக்க அணி: டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி ஸோர்ஸி, ஐடன் மார்க்ரம், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, கேசவ் மஹராஜ், லுங்கி இங்கிடி, கார்பின் போஷ், கைல் வெர்ரைன், டேவிட் பெடிங்ஹாம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், செனுரன் முத்துசாமி, டேன் பேட்டர்சன்.
ஆஸ்திரேலியா அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கோன்ஸ்டாஸ், மேட் குஹ்னெமன், மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா நேருக்கு நேர் தரவு
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையே மொத்தம் 101 போட்டிகள் நடந்துள்ளன. அதில் ஆஸ்திரேலியா அணி 54 போட்டிகளிலும், தென் ஆப்பிரிக்கா 26 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மேற்கொண்டு 21 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. மேற்கொண்டு இரு அணிகளும் நடுநிலையான இடங்களில் இரண்டு முறை மோதிய நிலையில், இரண்டு போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
லாட்ர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தின் தரவு
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் அமைந்துள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் இதுநாள் வரையிலும் 147 சர்வதேச டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 53 முறையும், பந்துவீசிய அணி 43 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 310 ரன்களாகவும், 4ஆவது இன்னிங்ஸ் ஸ்கோர் 157 ரன்களாகாவும் உள்ளது. இதுதவிர்த்து இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 729 ரன்களும், குறைந்தபட்ச ரன்களாக 38 ரன்களும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேரலை விவரம்
Also Read: LIVE Cricket Score
இந்திய ரசிகர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி ஆகியவற்றிலும் இப்போட்டியை நேரலையில் காணலாம். மேலும் இந்த இறுதிப்போட்டியானது இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now