உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: சறுக்கலை சமாளித்தா கோலி - ரஹானே, வெளிச்சம் காரணமாக தடைப்பட்ட ஆட்டம்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 2ஆம் நாள் தேநீர் இடைவேளையின் போது 3 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் ஜூன் 18 முதல் தொடங்கியுள்ளது. இதில் நேற்று மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் முழுவதுமாக ரத்தானது. எனினும் இந்த டெஸ்டில் கூடுதலாக ஒருநாள் ஒதுக்கப்பட்டுள்ளதால் மழையால் ஆட்ட முடிவில் பாதிப்பு ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து போட்டியின் இரண்டாம் நாளான இன்று மழை இல்லாததால் ஆட்டம் சரியான நேரத்தில் தொடங்கியுள்ளது. மேலும் இன்று 98 ஓவர்கள் வீசப்படவுள்ளன.
Trending
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் இரு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ள நிலையில் நியூசிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளருக்கு இடமில்லை.
அதன்படி ரோஹித் சர்மா- சுப்மன் கில் இணை இந்திய அணிக்கு அற்புதமான தொடக்கத்தை அளித்தார்கள். 20 ஓவர்கள் வரை இருவரையும் பிரிக்க முடியாமல் நியூசிலாந்து அணி பந்துவீச்சாளர்கள் தடுமாறினார்கள். எனினும் ரோஹித் சர்மா 34 ரன்களிலும், சுப்மன் கில் 28 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய புஜாரா 8 ரன் எடுத்திருந்த நிலையில் போல்ட்டிடன் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலி - துணைக்கேப்டன் அஜிங்கியா ரஹானே இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மெல்ல மெல்ல உயர்த்தி வருகின்றனர்.
இந்நிலையில் 55.3 ஓவர்கள் வீசப்பட்டிருந்த நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி தாமதமாகியுள்ளது. அதேசமயம் இந்த நேரம் தேநீர் இடைவேளையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்களை சேர்த்துள்ளது. இந்திய அணி சார்பில் விராட் கோலி 35 ரன்களுடனும்,அஜிங்கியா ரஹானே 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
2-ம் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 28 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 6 ரன்களுடனும் புஜாரா ரன்கள் எடுக்காமலும் களத்தில் உள்ளார்கள்.
Win Big, Make Your Cricket Tales Now