Advertisement
Advertisement
Advertisement

சாம்பியன் பட்டத்தை வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது - நாசர் ஹுசைன்!

இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெல்ல வாய்ப்பு உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan June 06, 2023 • 15:14 PM
WTC Final: India Should Learn From Past Mistakes In Finalising Their Playing XI, Feels Nasser Hussai
WTC Final: India Should Learn From Past Mistakes In Finalising Their Playing XI, Feels Nasser Hussai (Image Source: Google)
Advertisement

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது. இந்தியா மற்றும் அஸ்திரேலியா ஆகிய அணிகள் இந்த போட்டியில் மோத உள்ளன. கடந்த 2021ஆம் ஆண்டு முதன்முறையாக நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வியுற்று கோப்பையை கோட்டைவிட்டது.

இரண்டாவது முறையாக நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கும் இந்திய அணி தகுதிபெற்றுள்ளது. இந்த முறை நிச்சயம் வெற்றி பெற வேண்டும் எனும் முனைப்பில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தயாராகி வருகிறது. இந்நிலையில், இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெல்ல வாய்ப்பு உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

Trending


இதுகுறித்து பேசிய அவர், “இந்திய அணி எந்தவிதமான கள சூழலிலும் வெல்லும் என நான் நினைக்கிறேன். அதற்கு ஆஸ்திரேலியாவில் அவர்களது செயல்பாடு உதாரணம். சூரியன் பிரகாசிக்கும் வகையில் வானிலை ஒத்துழைத்தால் அவர்கள் 2 சுழற்பந்து வீச்சாளர்கள், 2 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 3-வது வேகப்பந்து வீச்சாளராக ஷர்துல் தாக்கூர் என்ற ஃபார்முலாவின் அடிப்படையில் அணியை தேர்வு செய்யலாம்.

கடந்த முறை நியூஸிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி அந்த மைதானத்தின் சூழலை தவறாக கணித்து விட்டனர் என கருதுகிறேன். அதே நேரத்தில் ஓவலில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது. கடந்த முறை இங்கிலாந்தை இங்கு வீழ்த்தி உள்ளது. ஷமிக்கும், கம்மின்ஸுக்கும் இடையே நிச்சயம் பலமான போட்டி நிலவுகிறது. அது ட்யூக் பந்தில் அவர்களது லெந்த் மற்றும் லைனில் எப்படி இருக்கப் போகிறது என்பதுதான்” என தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement