உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
போட்டியின் முதல் நாளான நேற்றைய தினம் தொடர் மழை காரணமாக டாஸ் போடப்படாமலேயே முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
Trending
இதையடுத்து இரண்டாம் நாளான இன்று (ஜூன் 19) வானிலை நன்றாக இருந்ததினால், இப்போட்டி திட்டமிட்டபடி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீசத் தீர்மானித்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் இன்றி ஏற்கெனவே அறிவித்த பிளேயிங் லெவன் வீரர்களே பங்கேற்கின்றனர். அதேசமயம் நியூசிலாந்து இப்போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களின்றி களமிறங்குகிறது.
இந்திய அணி: விராட் கோலி (கே), ரோஹித் சர்மா, சுப்மன் கில், சட்டேஸ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே, ரிஷப் பந்த், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ஜஸ்பிரீத் பும்ரா.
நியூசிலாந்து அணி: கேன் வில்லியம்சன் (கே), டாம் லேதம், டேவன் கான்வே, ராஸ் டெய்லர், ஹென்றி நிக்கோல்ஸ், பி.ஜே.வாட்லிங், காலின் டி கிராண்ட்ஹோம், நீல் வாக்னர், டிம் சௌதி, கைல் ஜெமிசன், ட்ரெண்ட் போல்ட்.
Win Big, Make Your Cricket Tales Now