
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் முதல்முறையாக விளையாடிய ஆஸ்திரேலியா அணி, தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடிய இந்திய அணியை வீழ்த்தி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையையும் வென்றது.
ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியும் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. இறுதிப்போட்டியின் முதல் இன்னிங்கில் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் ஜோடி சேர்ந்து கிட்டத்தட்ட 300 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றினர். முதல் இன்னிங்கில் 163 ரன்கள் விளாசிய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
கோப்பையை பெறும்பொழுது பேசிய ஆஸி அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறுகையில், “ஆரம்பத்தில் டாஸ் இழந்திருந்தாலும் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு முன்னிலை பெற்றோம். ஏனெனில் நாங்களும் பவுலிங் செய்யலாம் என்ற முடிவில் இருந்தோம். அதன் பிறகு ஸ்மித் மற்றும் ஹெட் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தது எங்களை நல்ல நிலைக்கு கொண்டு சென்றது.