க்ளீன் போல்டாகிய புஜாரா; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சட்டேஷ்வர் புஜாரா க்ளீன் போல்டாகிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.
முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 469 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. டிராவிஸ் ஹெட் 163 ரன்னில் அவுட்டானார். ஸ்டீவன் ஸ்மித் 121 ரன்னில் போல்டானார். அலெக்ஸ் கேரி 48 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், ஷமி, ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
Trending
இதையடுத்து, இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கியது. ரோஹித் சர்மா, ஷுப்மான் கில் அதிரடியாக தொடங்கினர். இதில் ரோஹித் சர்மா 15 ரன்னிலும், ஷுப்மான் கில் 13 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். தேநீர் இடைவேளை வரை இந்தியா 2 விக்கெட்டுக்கு 37 ரன்களை எடுத்துள்ளது. புஜார் 3 ரன்னும், விராட் கோலி 4 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
Pujara spent all these weeks in England for this #biggestupset #pujara #WTCFinal2023 #RohitSharma pic.twitter.com/hz8f8dMRV5
— Kaushik (@Rickel_2245) June 8, 2023
இதைத்தொடர்ந்து களமிறங்கிய சட்டேஷ்வர் புஜாரா நிதானமாக விளையாடிய நிலையில் 14 ரன்கள் எடுத்த போது கேமரூன் க்ரீன் பந்துவீச்சில் பந்தை கவணிக்கத்தவறி க்ளீன் போல்டாகினார். இதனால் இந்திய அணி பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் சட்டேஷ்வர் புஜாரா ஆட்டமிழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now