Advertisement

WTC Final: இன்றைய போட்டி குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் இன்றைய நாள் ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan June 19, 2021 • 19:40 PM
wtc-final-updates-sunny-day-beckons-in-southampton-play-should-on-time-at-day-2
wtc-final-updates-sunny-day-beckons-in-southampton-play-should-on-time-at-day-2 (Image Source: Google)
Advertisement

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுதாம்டனில் நடைபெறுகிறது. இதில் முதல் நாளில் விட்டுவிட்டு மழை பெய்த நிலையில் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். முதல் நாள் ஆட்டம் கை விடப்பட்டாலும் அதை ஈடுகட்டும் வகையில் ஆறாவது நாள் போட்டி நடைபெறும் என தொடக்கத்திலேயே அறிவிக்கப்பட்டிருந்தது.

எனவே ரிசர்வ் நாளான வரும் 23ஆம் தேதி போட்டியின் இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி டிராவில் முடியும் பட்சத்தில் இரு அணிகளும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை பகிர்ந்து கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கடந்த 5 ஆண்டுகளில் 32 டெஸ்ட் போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் 5 மட்டுமே டிராவில் முடிந்தது என்பதும் மற்ற போட்டிகளில் முடிவு கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending


இந்நிலையில் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இன்று சதவுத்தாம்டன் நகரில் மழை குறுக்கீடு இருக்குமா இருக்காதா என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.  சவுத்தாம்டனில் இன்று அவ்வளவாக மழை பெய்யாது என்றும் மழை பெய்வதற்கு 10 சதவித வாய்ப்பே இருப்பதாகவும் இங்கிலாந்து 

அதற்கேற்றார் போல் இன்று சவுத்தாம்ப்டனில் காலை முதல் வானிலை சீராக உள்ளதாக இந்திய அணி வீரரும், இப்போட்டியின் வர்ணனையாளருமான தினேஷ் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்துள்ளார். 

 

இதனால் இன்றைய போட்டி குறிப்பிட்ட நேரப்படி நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும் சவுத்தாம்ப்டனில் அடுத்த சில நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், இப்போட்டி எந்த இடையூறுமின்றி நடைபெறுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் நீடித்து வருகிறது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement