
WTC Final: Virat Kohli & co Hits the nets (Image Source: Google)
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் ஜூன் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதவுள்ளன.
இதற்கான 24 பேர் கொண்ட இந்திய அணி கடந்த ஜூன் 2ஆம் தேதி இங்கிலாந்து சென்றடைந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேசமயம் நியூசிலாந்து அணி கடந்த மாதமே இங்கிலாந்துக்கு சென்றடைந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ள அணிகள் இப்போட்டியில் மோதவுள்ளதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பன்மடங்கு அதிரகரித்து வருகிறது.