Advertisement

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியீடு; பாகிஸ்தான், இந்தியா முன்னிலை!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியளில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் முதலிரு இடங்களைப் பிடித்துள்ளன.

Advertisement
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியீடு; பாகிஸ்தான், இந்தியா முன்னிலை!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியீடு; பாகிஸ்தான், இந்தியா முன்னிலை! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 02, 2023 • 09:00 PM

2023 - 25ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் தற்போது வெளியாகியிருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக சமனில் முடிவடைந்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
August 02, 2023 • 09:00 PM

இதனால் இந்திய அணியின் புள்ளிகள் பாதிக்கப்படும் என்ற தகவல் வெளியானது. ஆனால் ஆஷஸ் தொடரிலும் நான்காவது டெஸ்ட் போட்டி மழையால் இரு அணிகளுமே வெற்றி தோல்வி என்று சமனில் முடியும் வகையில் மாறியது.

Trending

மேலும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதேபோன்று ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியும் ஆஸ்திரேலியா அணியும் மிகப்பெரிய தவறு ஒன்றை செய்து வாங்கி கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

வெற்றி பெறுவதற்காக இரு அணிகளும் ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக இரு அணிகளுக்கும் புள்ளிகள் குறைக்கப்பட்டிருக்கிறது. ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணிக்கு 19 புள்ளிகளும் ஆஸ்திரேலியா அணிக்கு 10 புள்ளிகளும் குறைக்கப்பட்டிருக்கிறது. இது இந்திய அணிக்கு சாதகமாக அமைந்துவிட்டது.

இதன் மூலம் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 100% புள்ளிகளுடன் பாகிஸ்தான் முதல் இடத்திலும், 66.7 சதவீதத்துடன் இந்திய அணி இரண்டாம் இடத்திலும், 30 சதவீத புள்ளிகள் உடன் ஆஸ்திரேலியா அணி மூன்றாம் இடத்திலும், 16.67 சதவீதிகளுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி நான்காவது இடத்திலும், 15 சதவீதம் புள்ளிகள் உடன் இங்கிலாந்து அணி ஐந்தாவது இடத்திலும் உள்ளது.

எனினும் இது மிகவும் ஆரம்பமான சூழ்நிலையாக இருந்தாலும் தற்போது பாகிஸ்தானும் இந்தியாவும் முதல் இரண்டு இடத்தை பிடித்திருக்கிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்த புள்ளி பட்டியல் பல்வேறு மாற்றங்களை சந்திக்கும். ஒருவேளை இந்தியாவும் பாகிஸ்தானும் இதே போல் முதல் இரண்டு இடங்களில் இருந்தால் அவர்கள் இறுதிப்போட்டியில் சந்திக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement