உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: போருக்கு தயாரான கோலி & வில்லியம்சன்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நாளை சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது.
உலகமெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நாளை சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது.
இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றனர். மேலும் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனும் இன்று அறிவிக்கப்பட்டது.
Trending
இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி, நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகியோர் இணைந்து காணொளி வாயிலாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய விராட் கோலி, நானும் கேன் வில்லியம்சன்னும் கடந்த சில ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் கொஞ்சம் கொஞ்சமாக நண்பர்களாகிவிட்டோம். நாங்கள் களத்தில் எப்போதும் உரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளோம்.
அவர் நியூசிலாந்து அணியின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன். அதனால் அவரை விரைவில் வீழ்த்த வேண்டும் என்பது பற்றியே நாங்கள் திட்டமிட்டு வருகிறோம். ஏனெனில் களத்திற்கு வெளியில் மட்டுமே நாங்கள் நண்பர்கள். அதனால் களத்தினுள் அவரை வீழ்த்துவதை எங்கள் கடமையாக கொண்டுள்ளோம். அதுவே எங்கள் வெற்றிக்கும் வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து பேசிய கேன் வில்லியம்சன்,“இந்தியா - நியூசிலாந்து அணிகள் ஒருவருக்கொருவர் எதிராக விளையாடிய வரலாறு நிறய உள்ளது. அதேபோல் நான் விராட் கோலி குறித்து நன்கு அறிவேன். அதுமட்டுமின்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்ல இரு அணிகளுக்கும் இது ஒரு அற்புதமான சந்தர்ப்பமாகும்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now