
ஐபிஎல் தொடர் முடிவுற்ற பிறகு இந்திய அணி கடந்த ஏழாம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் பங்கேற்றது. இதில் ஆஸ்திரேலியா அணியிடம் 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. கடந்த முறை நியூசிலாந்து அணியிடம், இம்முறை ஆஸி., அணியிடம் என தொடர்ச்சியாக இரண்டாவது முறையை பைனல் வரை வந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோல் வெல்ல முடியாமல் தவறவிட்டது.
இதனால் அடுத்த 2023/25 வரை நடக்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் லீக் சுற்றுகளில் பல்வேறு மாற்றங்களை இந்திய டெஸ்ட் அணியில் காணலாம் என்கிற பேச்சுக்கள் அடிப்படுகின்றன. இதனை வருகிற ஜூலை மாதம் தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து செய்யலாம் என்கிற முடிவுகளை பிசிசிஐ எடுத்துள்ளதாக தகவல்கள் வந்திருக்கின்றது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் முடிவுற்ற பிறகு, வருகிற ஜூலை 12ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை கிட்டத்தட்ட ஒரு மாதகாலம் வெஸ்ட் இண்டீஸ் பயணம் செய்யும் இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது.