Advertisement

IND vs SL: டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை நிகழ்த்திய விராட் கோலி!

டெஸ்ட் கிரிக்கெட்டில் 8,000 ரன்களைக் கடந்த 6ஆவது இந்திய வீரர் என்கிற பெருமையை விராட் கோலி அடைந்துள்ளார்.

Advertisement
Yet Another Record For Virat Kohli In 100th Test Match
Yet Another Record For Virat Kohli In 100th Test Match (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 04, 2022 • 01:29 PM

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி, 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டி20 தொடரில் 3-0 என முழுமையாக வென்றது இந்திய அணி. டெஸ்ட் தொடர் மொஹலி மைதானத்தில் தொடங்கியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
March 04, 2022 • 01:29 PM

முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இது கோலி விளையாடும் 100-வது டெஸ்ட், இலங்கை டெஸ்ட் அணியின் 300-வது டெஸ்ட் என மொஹலி ஆட்டம் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. 

Trending

முதல் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்தது. விஹாரி 30, கோலி 15 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

அதன்பின் விஹாரி, 93 பந்துகளில் அரை சதமெடுத்தார். இதனால் இனி வரும் டெஸ்டுகளில் இந்திய அணியில் நிரந்தரமாக இடம்பிடிப்பார் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் இன்று 38 ரன்களை எடுத்தபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் 8,000 ரன்களைப் பூர்த்தி செய்தார் விராட் கோலி. இந்த இலக்கை எட்டிய 6ஆவது இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். 

குறைந்த இன்னிங்ஸில் 8000 டெஸ்ட் ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள்

154 - சச்சின் டெண்டுல்கர்
158 - ராகுல் டிராவிட் 
160 - சேவாக்
166 - கவாஸ்கர்
169 - கோலி

பின்னர் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எம்புல்தொனியா பந்துவீச்சில் கிளீன் போல்டாகி ஏமாற்றமளித்தார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement