
ஆஷஸ் தொடரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 26 ரன்கள் பின் தங்கியிருந்தது. ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதன் மூலம் 250 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது.
இதையடுத்து இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி பொறுமையுடன் விளையாடி ஆங்காங்கே சில பார்ட்னர்ஷிப்களை அமைத்தது திருப்புமுனையாக அமைந்தது. ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் போன்ற முன்னணி வீரர்கள் விரைவாக விக்கட்டுகளை இழந்த போதிலும் பொறுப்புடன் விளையாடி ஹாரி புரூக் 75 ரன்கள் அடித்துக் கொடுத்தது வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை கொடுத்தது.
கடைசியில் வந்த கிரிஸ் வோக்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் நன்றாக பினிஷ் செய்து கொடுத்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 251 ரன்கள் இலக்கை சேஸ் செய்து மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடரின் முதல் தோல்வியை சந்தித்த பிறகு பேட்டியளித்த பேட் கம்மின்ஸ் தோல்விக்கான காரணங்களை பகிர்ந்து கொண்டார்.