Advertisement

புதிய வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் தங்களை சரி செய்து கொள்ள வேண்டும் - ஐடன் மார்க்ரம்!

சர்வதேச அளவில் ஒரு தொடரில் விளையாடுவதற்கு முன்பு இளம் வீரர்கள் கொஞ்சம் நெருக்கமாகவும் ஆழமாகவும் புரிந்து கொள்வது அவசியம் என தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan December 09, 2023 • 23:25 PM
 புதிய வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் தங்களை சரி செய்து கொள்ள வேண்டும் - ஐடன் மார்க்ரம்!
புதிய வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் தங்களை சரி செய்து கொள்ள வேண்டும் - ஐடன் மார்க்ரம்! (Image Source: Google)
Advertisement

இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக அந்த நாட்டில் மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுகிறது. இதற்கு இந்திய அணியின் தரப்பில் மூன்று கேப்டன்கள் அறிவிக்கப்பட்டார்கள். தென் ஆப்பிரிக்க தரப்பில் இந்த மூன்று தொடர்களுக்கும் இரண்டு கேப்டன்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். அதன்படி டெம்பா பவுமாவை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும், ஐடன் மார்க்ரம் வெள்ளைப்பந்து கிரிக்கெட் வடிவங்களுக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். 

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை நடைபெறவுள்ளது. தென் ஆப்பிரிக்க வீரர்களை பொறுத்தவரையில் அவர்களுக்கு நிறைய கிரிக்கெட் போட்டிகள் இருக்கிறது. ஆனால் அவையெல்லாம் பல்வேறு நாடுகள் நடத்தும் தனிப்பட்ட டி20 லீக்குகள். இந்த வீரர்கள் அனைவரும் டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக ஒரே அணியாக சேர்ந்து விளையாடுவதற்கு நிறைய போட்டிகள் இல்லை. புதிய இளம் வீரர்கள் ஒரே அணியாக ஒன்று சேர்வதில் பிரச்சனை இதனால் உண்டாகிறது.

Trending


இதுகுறித்து பேசிய கேப்டன் மார்க்ரம், “தற்போது டி20 அணியில் புதிய முகங்களாக இடம் பெற்ற வீரர்களுக்கு எதிராக நாங்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் நிறைய விளையாடி இருக்கிறோம். ஆனால் சர்வதேச அளவில் ஒரு தொடரில் விளையாடுவதற்கு முன்பு அவர்களை கொஞ்சம் நெருக்கமாகவும் ஆழமாகவும் புரிந்து கொள்வது அவசியம். நாங்கள் இவர்களுடன் சில நாட்களை செலவிட்டிருக்கிறோம். இவர்கள் என்ன மாதிரி என்று நாங்கள் புரிந்து இருக்கிறோம்.

இப்பொழுது எல்லாம் கிரிக்கெட்டின் இயல்பாக இதுதான் இருக்கிறது. மிக வேகமாக கிரிக்கெட் தொடர்கள் வந்து கொண்டே இருக்கின்றன. மேலும் புதிய வீரர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். புதிய வீரர்கள் வெகு சீக்கிரத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் தங்களை சரி செய்து கொள்ள வேண்டும்.

டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக எங்களுக்கு நிறைய கிரிக்கெட் இருக்கிறது. ஆனால் நாங்கள் ஒரே அணியாக சேர்ந்து விளையாடுவதற்கு சர்வதேச போட்டிகள் நிறைய இல்லை. நாங்கள் ஒரே குழுவாக விளையாட விரும்புகிறோம் என்பதை புதிய வீரர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பின்பு அவர்கள் அணிக்கு வரும்பொழுது அவர்கள் ஒரே பிராண்ட் கிரிக்கெட்டை விளையாட வசதியாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement